Home இந்தியா “ஆண்களின் வாழ்க்கை எளிதல்ல” – கேலியை சிரிப்பால் கடந்து சென்ற இளைஞன்

“ஆண்களின் வாழ்க்கை எளிதல்ல” – கேலியை சிரிப்பால் கடந்து சென்ற இளைஞன்

பாட்னாவில் பள்ளிப் பருவ நண்பன் பீட்சா டெலிவரி செய்வதை கண்ட தோழி, அதனை வீடியோ எடுத்து கேலி செய்த சம்பவம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இணையதளத்தில் வைரலான அந்த காணொளியில் பேசிய தோழி, தன்னுடன் பயின்ற நண்பனைப் பார்த்து, “பள்ளியில் எல்லோரையும் ஊக்குவித்த நீ இன்று டெலிவரி ஊழியரா?” என்று கேட்டு அவமானப்படுத்துகிறார்.

ஆனால் அந்த இளைஞர், அழகான புன்னகையுடன் அதைக் கடந்து செல்கிறார். இந்த வீடியோவைப் பகிரும் நெட்டிசன்கள், நேர்மையாக செய்யப்படும் எந்தத் தொழிலும் இழிவானது இல்லை என்று பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், அந்த பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்து வரும் இணையவாசிகள், இந்த இளைஞர் தனது சிரிப்பின் பின்னால் பல பொறுப்புகளைச் சுமந்துள்ளார் என்றும், “ஆண்களின் வாழ்க்கை எளிதானது அல்ல” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.