முழுமுதற் கடவுள் வினை தீர்ப்பவர் விநாயக பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அதிகாலையில் நீராடி வீடுகள் தோறும் தோரணமிட்டு இலையில் புத்தரிசியை பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து அருகம் புல் மல்லிகைப்பூ எருக்கம் பூ மலர்களால் அலங்கரிக்கின்றனர்.
முக்கணிகளுடன் அப்பம் கொழுக்கட்டை மோதகம் அவல் பொரி கொய்யாப்பழம் போன்றவற்றை படையிலிட்டு விநாயகரை வழிபடுகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி நாளில் உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோர் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பலதரப்பட்ட மக்களும் கலாச்சாரமும் கொண்டவர்கள் இந்தியாவில் உள்ளனர்,இந்த அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது விநாயகர் சதுர்த்தி








