Home இந்தியா “முதல் சனிக்கிழமைகளில் அரசு அலுவலர்களுக்கு புதிய நடைமுறை”

“முதல் சனிக்கிழமைகளில் அரசு அலுவலர்களுக்கு புதிய நடைமுறை”

கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் மாதம்தோறும் முதல் சனிக்கிழமை கதர் ஆடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெங்களூருவின் விதான சௌதாவில் அம்மாநில அரசின் தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜினிஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கதர் ஆடைகளின் விற்பனையை அதிகரித்து, அதன் மூலம் நெசவாளர்களுக்கு உதவ வேண்டும் என விவாதிக்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்கள் மாதம்தோறும் முதல் சனிக்கிழமை கதர் ஆடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவை ஏற்றுக்கொள்வதாக கர்நாடக அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் சடாக்சரி தெரிவித்துள்ளார். கதர் ஆடைகளை அரசின் காதி கிராமயோக் கடைகளில் வாங்க வேண்டும் என்றும், அங்கு வாங்கப்படும் கதர் ஆடைகளுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Devi
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.