பத்ம விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக குடியரசு தினத்துக்கு முந்தைய நாளில் இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில்தான் தற்போது 2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
2026ஆம் ஆண்டு குடியரசு தினத்துக்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரை நடைமுறை கடந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதியே தொடங்கியது. இந்த பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருதுகள் இணையதளம் மூலம் பெறப்பட்டன.
ஆரம்பத்தில் பரிந்துரைகளை சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூலை 31 என்று அரசு அறிவித்திருந்தது. பின்னர் அந்த காலக்கெடு ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தற்போது இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சற்றுமுன்னர் 45 பேர் அடங்கிய முதல் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் கவுடா, அர்மினிடா மற்றும் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 45 பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அதில் குறிப்பாக, கால்நடை விஞ்ஞானி டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
மேலும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறும்பா ஓவியர் ஆர். கிருஷ்ணாவுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வெண்கலச் சிற்பக் கலைஞர் கரியப்பா கவுண்டருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், கர்நாடகாவைச் சேர்ந்த கவுடா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெர்னாண்டஸ் ஆகியோருக்கு “அறியப்படாத நாயகர்கள்” என்ற வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த பத்ம விருதுகள் குடியரசு தினத்துக்கு முந்தைய நாளில் அறிவிக்கப்படுகின்றன. இந்த விருதுகளுக்காக யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட நபரே விண்ணப்பிக்கலாம் அல்லது வேறு ஒருவருக்காகவும் பரிந்துரை செய்யலாம்.
இதன் மூலம், இந்த விருதுகள் மக்களுக்கான விருதுகள் என்பதைக் காட்டுகிறது. அசாதாரணமான பங்களிப்புகளைச் செய்த சாதாரண இந்தியர்களை கொண்டாடும் கொள்கையின் அடிப்படையிலேயே இந்த பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் அங்கீகரிக்கப்படாத பல நாயகர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருது பெறுபவர்கள் தங்களுடைய தனிப்பட்ட இன்னல்களையும் துயரங்களையும் கடந்து, தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்கியவர்களாக மட்டுமல்லாமல், சமுதாயத்திற்கும் சேவை செய்தவர்களாக இருப்பார்கள்.
இந்த விருதுகள், விளிம்பு நிலை, பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகங்கள், பழங்குடியினர் மற்றும் தொலைதூர, கடினமான பகுதிகளைச் சேர்ந்த நபர்களையும் உள்ளடக்கியவையாகும்.
மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் நலனுக்காக தங்களுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல், சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலைத்த வளர்ச்சி போன்ற துறைகளில் பணியாற்றியவர்களும் இந்த விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பழமையான பாரம்பரியத்தை பாதுகாப்பது, எல்லைப் பகுதிகளில் தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்துவது, பழங்குடி மொழிகள் மற்றும் தற்காப்புக் கலைகளை வளர்ப்பது, அழிந்து வரும் கலைகள் மற்றும் நெசவுகளை பாதுகாப்பது, நாட்டின் சுற்றுச்சூழல் செல்வத்தை காக்குவது, தூய்மையை முன்னிறுத்துவது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டவர்களே இந்த விருதுகளைப் பெறுகின்றனர்.
இதன் மூலம், தேசத்திற்காக அமைதியாக சேவை செய்து வரும் சாதாரண இந்தியர்களை அங்கீகரிக்கும் வகையிலேயே பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளில் முதற்கட்டமாக 45 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளுக்கான பட்டியலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, இந்த பட்டியல்கள் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் மாலை வெளியாவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பிற்பகலிலேயே பத்மஸ்ரீ விருது பெற்றோர் பட்டியல் வெளியாகியுள்ளது.
பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று விருதுகளும் நாட்டின் உயரிய குடிமை விருதுகளாகும். இவை 1954ஆம் ஆண்டு தொடங்கப்பட்டவை.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த மற்றும் தனித்துவமான சாதனைகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், தற்போது 45 பேர் கொண்ட பத்மஸ்ரீ விருது பட்டியல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அடுத்த கட்டமாக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளுக்கான பட்டியலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








