துபாயில் வசிக்கும் இந்திய வெளிநாட்டவர்களுக்கு ஒரு மிக மிக முக்கியமான அறிவிப்பு. செப்டம்பர் 1, 2025 முதல் இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான புகைப்பட விதிகளில் கடுமையான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
புது பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க போறீங்கனாலும் சரி, பழைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க போறீங்கனாலும் சரி. புதிய விதிகளை தெரிஞ்சுக்கலனா உங்க அப்ளிகேஷன் நிராகரிக்கப்பட வாய்ப்பிருக்கு.
இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் இந்திய பாஸ்போர்ட்டுகளை உலகளாவிய தரத்திற்கு இணையாக கொண்டு வருவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளது.
ஐசிஏஓ அதாவது இன்டர்நேஷனல் சிவில் ஏவியேஷன் ஆர்கனைசேஷன் எனப்படும் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் தரநிலைகளின் படி இனிமேல் புகைப்படங்கள் இருக்க வேண்டும்.
இதன் மூலம் நமது பாஸ்போர்ட்டுகள் மெஷின்களால் எளிதாக படிக்க கூடியதாகவும் உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்களில் நமது பயணம் எந்த தடையும் இன்றி சுமூகமாக நடக்கவும் உதவும்.
புதிய புகைப்பட விதிகள் என்னென்ன? இனி நீங்க பாஸ்போர்ட்டுக்கு கொடுக்கிற போட்டோ இப்படிதான் இருக்கணும். போட்டோவோட பேக்ரவுண்ட் கட்டாயமாக வெள்ளை நிறத்தில் மட்டும்தான் இருக்கணும்.வேற எந்த கலரும் இருக்கக்கூடாது.
முகம் போட்டோவோட 80 முதல் 85% பகுதியை மறைக்கிற மாதிரி ரொம்ப கக்ளோஸ்அப்ல இருக்கணும். போட்டோவல எந்த பில்டரும் பயன்படுத்த கூடாது. போட்டோவை கம்ப்யூட்டர்ல எடிட் பண்ணவோ மங்கலாகவோ கூடாது.
உங்க இயற்கையான தோல் நிறம் அப்படியே தெரியணும். முகத்துல எந்த நிடலும் விடக்கூடாது. கண்ணு சிவப்பா தெரியக்கூடாது. கண்கள் திறந்திருக்கணும் வாய் மூடி இருக்கணும். முடி கண்களை மறைக்கக்கூடாது. முகம் கேமராவுக்கு நேராக நடுவில் இருக்கணும். கண்ணாடி போட்டிருந்தா அதை கடற்றி விட்டுதான் போட்டோ எடுக்கணும்.
மத காரணங்களுக்காக மட்டும் தலைக்கவசம் அணியலாம். ஆனா முகம் முழுமையாக தெரியணும். போட்டோ குறைந்தது 1.5 m தூரத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
துபாயில் உள்ள இந்திய தூதரகம் விண்ணப்பத்தாரர்கள் அப்பாயின்ட்மென்ட் புக் செய்றதுக்கு முன்னாடி இந்த புதிய விதிகளை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்து அதன்படி புதிய புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்த மாற்றம் குவைத் போன்ற பிற இந்திய தூதரகங்களிலும் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுவிட்டது. அபுதாபியிலும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








