கேரளாவில் சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியை பள்ளி நிர்வாகத்தால் உள்ளே விட அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கொல்லத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், சுடிதார் அணிந்து வந்ததற்காக பள்ளி நிர்வாகம் தலைமை ஆசிரியையை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை, பள்ளி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.








