Home இந்தியா ” திகில் ” சிக்கன் பப்ஸ்க்குள் பாம்பு :

” திகில் ” சிக்கன் பப்ஸ்க்குள் பாம்பு :

தெலுங்கானாவில் பேக்கரியில் வாங்கிய சிக்கன் பப்ஸில் பாம்பு இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மஹபூப் நகர் மாவட்டம் ஜட்சலாவில் உள்ளூர் பேக்கரியில் ஸ்ரீசைலா என்ற பெண் தனது குழந்தைகளுக்காக முட்டை பப்ஸ் மற்றும் சிக்கன் பப்ஸ் வாங்கிள்ளார்.

வீட்டில் சிக்கன் பப்ஸ் பார்சலை திறந்த போது பாம்பு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அதை எடுத்துக்கொண்டு பேக்கரிக்கு சென்று முறையிட்ட போது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது.

இதனால் கடும்கோபமடைந்த ஸ்ரீ சைலா காவல் நிலையத்தில் சென்று இது குறித்து புகார் அளித்தார்.