தட்கல்ளில் டிக்கட் போல பொது டிக்கட் முன்பதிவிலும் முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் கட்டாயம் என்ற நடைமுறை அடுத்த மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளது.
ரயில் டிக்கட் முன்பதிவில் வெளிப்படை தன்மையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் பொது டிக்கட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் பயணி தனது ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வருகிறது.
தற்போது தட்கல் டிக்கட்டுகளை முன்பதிவு செய்ய மட்டுமே இந்த விதிமுறை உள்ள நிலையில் அக்டோபரில் பொது ஒதுக்கீட்டு டிக்கட்டுகளுக்கும் இந்த முறை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
உதாரணமாக நவம்பர் 15ஆம் தேதி பயணிக்க நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கட் முன்பதிவு செய்ய விரும்பினால் 60 நாட்களுக்கு முன்பே அதாவது செப்டம்பர் 16 ஆம் தேதி காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும்.
புதிய விதிகளின் படி ஆதார் சரிபார்ப்பை முடித்த ஐஆர்சிடிசி பயணர்கள் மட்டுமே காலை 8 முதல் 8:15 மணி வரை அதாவது முதல் 15 நிமிடங்களுக்கு டிக்கட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
ஆதார் இணைப்பு இல்லாத வாடிக்கையாளர்கள் அந்த நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது.








