அமெரிக்காவுக்காக ரஷ்யாவை புறக்கணிக்கலாமா யார் இப்ப நமக்கு முக்கியம் அப்படின்ற ஒரு கேள்வி வரும். ரஷ்யாவும் அமெரிக்காவும் பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு ஒரு முக்கியமான புத்தி சார்ந்த கூட்டாளிகளாக இருந்து வராங்க.
இப்ப இருக்கக்கூடிய உலக அரசியல் சூழ்நிலையில் பார்க்கும்போது இந்தியா யாருடைய பக்கம் இருக்கிறது .அதிக நன்மை பயக்கும் அப்படிங்கற கேள்வி எழுது.
ரஷ்யாவில இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரியை அமெரிக்க ட்ரம்ப் விதிச்சிருக்கார். இது அமலுக்கு வரும்போது இந்தியாவின் ஏற்றுமதி மீதான அமெரிக்காவின் வரி அப்படிங்கறது 50% ஆக அதிகரிக்கும்.
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் நீண்ட கால மற்றும் நம்பகமான உறவு இருக்கு. பாதுகாப்பு ஒப்பந்தங்கள் முதல் எரிசக்தி விநியோகம் வரை ரஷ்யா இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக இருந்து வராங்க.
சமீப காலங்களில் ரஷ்யாவிலிருந்து வந்த மலிவான கச்சா எண்ணெய் இந்திய பொருளாதாரத்தின் அழுத்தத்தை குறைத்தது . இன்னொரு பக்கம் அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருக்காங்க.
2024 25ஆம் ஆண்டில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் அப்படிங்கிறது 131.84 பில்லியன் டாலராக இருந்தது. ஆனா அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே வளர்ந்து வரக்கூடிய மோதல் யாருடைய நெருக்கம் இந்தியாவிற்கு அதிகம் பயனளிக்கும் . அப்படிங்கறதுதான் இப்போ மிகப்பெரிய கேள்வியாக இருக்கு.
இந்தியா தன்னுடைய மொத்த எணணெய் தேவையில் 88%த்தை இறக்குமதி செய்றாங்க. வர்த்தக அமைச்சரக தரவுகள் படி 2024 25 நிதியாண்டுல் இந்தியாவின் மொத்த எண்ணை இறக்குமதியில சுமார் 35% ரஷ்யாவிலிருந்து நமக்கு வந்தது.
அதே சமயத்துல 2018 நிதியாண்டுல் இது 1.3%ஆக மட்டுமே இருந்துச்சு. உக்ரைன் போருக்கு பிறகுதான் மலமலன்னு அதிகமாகுது.
உக்ரைன் போருக்கு பின்னாடி மேற்கத்தி நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் எல்லாம் விதிக்கிறாங்க.அ துக்கு பிறகு ரஷ்யா சலுகை விலையில் எண்ணெய் விற்பனை பண்றாங்க. இது இந்தியாவுக்கு ஒரு சாதகமாக அமைந்தது.
ரஷ்யாவிலிருந்து மலிவான விலையில் எண்ணெய் வாங்குவது மூலமாக இந்தியா ஆண்டுதோறும் 10 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்துறாங்க
இப்ப இன்னொரு பக்கம் இந்தியா அமெரிக்காவோட சுமார் 41 பில்லியன் டாலர் வர்த்தக உரிமையை கொண்டிருக்காங்க. நம்ம அமெரிக்காவுக்கு சுமார் 87 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை விருக்கிறோம்.
ட்ரம்பினுடைய 50%த வரி அமலானா அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 50 பில்லியன் டாலர் வரை குறையக்கூடும்.
ரஷ்யாவிலிருந்து கச்சா என்ணைய் வாங்காவிட்டால் இந்த வரி 25% ஆக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில இந்தியாவின் ஏற்றுமதி 30 பில்லியன் டாலர் குறையும்.
அமெரிக்காவினுடைய ஒரு சதவீத வரி அப்படிங்கறது சுமார் ஒரு பில்லியனுக்கு சமம். ட்ரம்ப் 50% வரியை விதித்தால் இந்தியா சுமார் 50 பில்லியன் டாலர் இழப்பை சந்திக்கும்.
இந்தியாவில பணம் மட்டுமல்ல ஏராளமான வேலை வாய்ப்புகளும் இழக்கக்கூடிய நிலை ஏற்படலாம். இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள் இழக்கலாம். வரிகள் அதிகரித்தால் குறைவான பொருட்களை அமெரிக்காவுக்கு போகும்
இந்தியாவின் வர்த்தகம் பாதிக்கப்படும். வேலை இழப்பும் ஏற்படும்.
அமெரிக்கா 50%த வரியை கண்டினியூ பண்ணாங்க அப்படின்னா இந்தியாவில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வரை இழப்பு ஏற்படலாம். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முடிவுகள் பொருளாதார கண்ணோட்டத்தில் மட்டுமே எடுக்கப்படுறது கிடையாது.
மாறாக உலக அரசியல் ராஜ்ஜியம் மற்றும் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ட்ரம்பினுடைய அழுத்தத்திற்கு ஆட்பட்டு ரஷ்யாவுடனான உறவை இந்தியா கெடுத்து கொள்ள
முடியாது.
ஏன்னா நெருக்கடியான காலகட்டங்களலில் அமெரிக்காவை விட ரஷ்யா இந்தியாவுக்கு சப்போர்ட் பண்ணி இருக்காங்க. நமக்கு உதவி பண்ணி இருக்காங்க .
1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போர்ல ரஷ்யா அப்போ வந்து சோவியத் யூனியனாக சோவியத் ஒன்றியமாக இருந்தது. அப்போ இந்தியாவுக்கு ஆயுதங்கள் நிறைய ஆதரவை நமக்கு கொடுத்தது மட்டுமில்லாம ஐக்கிய நாடுகள் சபையிலயும் உறுதுணையாக நின்றது. நமக்காக ரஷ்யா.
இன்னொரு பக்கம் அமெரிக்கா பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்து இந்திய பெருங்கடலை இந்தியாவிற்கு எதிராக தனது ஏழாவது கடற்படையை அனுப்பினாங்க.
1998ஆம் ஆண்டு அணுஆயுத சோதனைக்கு பிறகும் ரஷ்யா இந்தியாவிற்கு தொடர்ந்து ஆயுதங்களை கொடுத்தாங்க. மேற்கத்திய நாடுகள் இந்தியா மீது பல்வேறு தடைகளை விதித்து வந்த காலம் அது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நம்பகத்தன்மை பற்றிய கேள்வியும் இருக்கிறது. ரஷ்யா கிட்ட இருந்து நம்ம எண்ணெய் வாங்க நிறுத்தணும் அப்படின்னா 25% வரையே நீக்கும் .
அப்படிங்கிற எந்த உத்தரவாதமும் கிடையாது. கண்டிப்பா நீக்கும் சொல்ல முடியாது.
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட உத்தியோட இந்த நேரத்தில செயல்படணும். ஒரே நாட்டை நம்பி
இருக்க முடியாது.
ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபி எமிரேட் போன்ற பெரிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுபடுத்த வேண்டிய நேரம் இது. இந்தியா ஏற்றுமதிகளை ஓரளவுக்கு பன்முகப்படுத்தலாம். ஆனால் அது சுலபம் கிடையாது.
அமெரிக்கா மிகப்பெரிய ஒரு தந்தை அத்தகைய தந்தையை உலகில் கண்டுபிடிப்பது கடினம். இந்தியாவிற்கும் உள்நாட்டில் சீர்திருத்தங்கள் எல்லாம் தேவையான ஒரு சூழலாக இருக்கிறது.
அதற்கு மாற்றாக பல நாடுகளோட வர்த்தக உறவை இன்னும் வலுபடுத்த வேண்டும் அதிகப்படுத்த வேண்டும். அதே சமயத்தில் அமெரிக்காவுக்காக ரஷ்யாவை புறக்கணிப்பது அப்படிங்கறது எந்த வகையிலும் சரியான முடிவாக இருக்காது.
ஏன்னா பல காலகட்டங்கள் அமெரிக்கா கூட நமக்கு எதிரா நின்னுருக்கா ரஷ்யா நமக்கு சப்போர்ட் பண்ணிருக்காங்க. அந்த வகையில இந்தியா எடுக்க வேண்டிய முடிவு அப்படிங்கறது மிக முக்கியமான தெளிவான முடிவாகதான் இருக்கணும் இருக்க வேண்டும்.








