Home இந்தியா “RSS அலுவலகத்தில் பரபரப்பு நிலை… தமிழக பாஜக பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம்”

“RSS அலுவலகத்தில் பரபரப்பு நிலை… தமிழக பாஜக பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம்”

தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கேசவ விநாயகம் விடுவிக்கப்பட்டுள்ளார். பாஜக–ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கிடையே பாலமாக செயல்படும் முக்கிய பொறுப்பு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பதவியாகும்.

கேசவ விநாயகம் 2015ஆம் ஆண்டு முதல் இந்த பொறுப்பை வகித்து வந்தார். இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இன்று ஆர்எஸ்எஸ்–பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கேசவ விநாயகத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கேசவ விநாயகத்தை ஆர்எஸ்எஸ் பணிக்கு திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடியும் வரை, பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பை பாஜக–ஆர்எஸ்எஸ் கூட்டு தலைமையின் கீழ் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.