Home இந்தியா 90 நிமிடம் நடந்தது என்ன..? தப்பி ஓடிய வழிகாட்டி :

90 நிமிடம் நடந்தது என்ன..? தப்பி ஓடிய வழிகாட்டி :

ராஜஸ்தான் வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற சவாரி வாகனம் பழுதடைந்ததால் வழிகாட்டி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானின் ரந்தம்பூர் தேசிய பூங்காவின் புலிகள் நிறைந்த காட்டில் சுற்றுலா பயணிகள் குழு ஒன்று சென்று கொண்டிருந்தது.

அவர்கள் சென்ற சவாரி வாகனம் திடீரென பழுதடைந்ததால் அவர்களுடன் வந்த வழிகாட்டி மாற்று வாகனம் ஏற்பாடு செய்து தருவதாக கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

ஆனால் அவர் 90 நிமிடங்களாக வராததால் அங்கு தவித்துக் கொண்டிருந்தவர்களை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

தப்பி ஓடிய வழிகாட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரந்தம்பூர் புலிகள் காப்பக கலை இயக்குனர் அனுப் கூறியுள்ளார்.

Devi
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.