ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு, விமானக் கட்டணம் திருப்பிச் செலுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த நான்கு நாட்களாக இண்டிகோ விமான சேவையில் பயணிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
டிசம்பர் 5 முதல் 15ஆம் தேதி வரை, பயணிகள் டிக்கெட் ரத்து செய்தல் அல்லது வேறு தேதிகளுக்கு மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.








