Home இந்தியா ‘ஒரே நேரத்தில் இரண்டு ஏவுகணைகள்!’ எதிரிகளை நடுங்க வைத்த இந்தியாவின் பிரளாய்

‘ஒரே நேரத்தில் இரண்டு ஏவுகணைகள்!’ எதிரிகளை நடுங்க வைத்த இந்தியாவின் பிரளாய்

இந்தியாவின் பலத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக, டிஆர்டிஓ அமைப்பு ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளது.

ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து, ‘பிரளாய்’ என்ற அதிநவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது ஒரு சாதாரண சோதனை அல்ல. இது ஒரு பெரிய சால்வோ லாஞ்ச் சோதனை.

அப்படின்னா என்னன்னு தெரியுமா?
ஒரே ஒரு லாஞ்சர் கருவியிலிருந்து, அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகளை தொடர்ச்சியாக ஏவி தாக்குவதுதான் சால்வோ லாஞ்ச்.

ஏன் இது எதிரிகளுக்கு ஆபத்து?
போர்க்களத்தில் எதிரிகளிடம் ஏர் டிஃபென்ஸ் சிஸ்டம் இருக்கும். அதாவது, நாம் ஒரு ஏவுகணையை ஏவினால், அதை வானிலேயே தடுத்து அழிக்கும் அமைப்பு. ஆனால் இந்த சால்வோ லாஞ்ச் முறையில், ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை ஏவும்போது எதிரியின் அமைப்பு குழம்பிவிடும். ஒன்றை தடுத்தாலும், அடுத்த ஏவுகணை தப்பாமல் சென்று எதிரியின் பதுங்குக் குழியை தரைமட்டமாக்கிவிடும். இதுதான் இந்தியாவின் கேம் சேஞ்சர்.

சரி, இந்த பிரளாய் ஏவுகணையின் சிறப்புகள் என்ன?

நம்பர் ஒன்று – குவாசி பேலிஸ்டிக்
சாதாரண ஏவுகணைகள் நேராக சென்று தாக்கும். ஆனால் பிரளாய் அப்படியில்லை. வானில் பறக்கும் போதே எதிரியின் ரேடாரை ஏமாற்ற, தனது பாதையை மாற்றிக்கொண்டே செல்லும். இதை இடைமறிப்பது மிகவும் கடினம்.

ரண்டு – சாலிட் ஃப்யூவல்
இதில் திட எரிபொருள் பயன்படுத்தப்படுவதால், நினைத்த நேரத்தில் உடனடியாக ஏவ முடியும். எரிபொருள் நிரப்ப காத்திருக்க தேவையில்லை.

மூன்று – துல்லியம்
அதிநவீன நேவிகேஷன் சிஸ்டம் இருப்பதால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகத் துல்லியமாக சென்று தாக்கும்.

இந்த சோதனையை இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் நேரில் பார்த்து வியந்துள்ளனர். டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி. காமத், இந்த ஏவுகணை இப்போது ராணுவத்தில் சேர்க்க முழுமையாக தயாராகிவிட்டது என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் எல்லையில் வாலாட்டினால், அவர்களுக்கு பாடம் புகட்ட இந்தியா கையில் கிடைத்திருக்கும் புதிய சவுக்கடி தான் இந்த பிரளாய்.