Home இந்தியா “விட்டாரா EV” களத்துக்கு வருது – அகமதாபாத்தில் புதிய உற்பத்தி ஆலை திறப்பு :

“விட்டாரா EV” களத்துக்கு வருது – அகமதாபாத்தில் புதிய உற்பத்தி ஆலை திறப்பு :

அகமதாபாத்தில் மாருதி Suzuki நிறுவன மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

குஜராத்தினுடைய ஹன்சல்பூர் ஆலையில் இன்று முதல் மாருதி சுசூகி நிறுவனத்தினுடைய மின்சார கார்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே அதிக கார்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனமாகவும் விற்பனையில் முதலிட்டத்தில் இருக்கக்கூடிய கார் தயாரிப்பு நிறுவனமாகவும் மாருதி சுசூகி நிறுவனம் இருந்து வருகின்றது.

இந்த நிலையில் தான் இந்தியாவில் மின்சார கார்களை தயாரிப்பதற்கு முக்கியத்துவம் தரக்கூடிய விதமாக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது.

உற்பத்தி செய்யப்படக்கூடிய கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலமாகவும் மத்திய அரசுக்கு இந்தியாவிற்கு கணிசமான வருவாய் கிடைக்கின்றது.

இந்த நிலையில் தான் இந்தியாவினுடைய வாகன விற்பனை சந்தையில் குறிப்பாக பயணியர்களுக்கான அந்த கார் விற்பனை சந்தையில் முதலிடத்தில் இருக்கக்கூடிய மாருதி சுசூகி நிறுவனம் தன்னுடைய மின்சார கார் உற்பத்தியை இன்று முதல் தொடங்கி இருக்கின்றது.

அந்த பேட்டரி உற்பத்தி ஆலையை பிரதமர் தொடங்கி வைத்திருக்கின்றார். மாருதி சுசூகியினுடைய ஈவி கார் ஆலையையும் தனியாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்திருக்கின்றார்.

அகமதாபாத்திலே மாருதி சுசூகி நிறுவனத்தினுடைய மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலை தற்பொழுது பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றது.

இவிட்டாரா கார்கள் அதாவது விட்டாரா என்கின்ற பெயர் கொண்ட கார்கள் மின்சார கார்களாக மாருதி சுசூகி நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கப்பட உள்ளன. அந்த கார்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாக இருக்கின்றன.

கார்களை உற்பத்தி செய்து அதிகளவில் ஏற்றுமதி செய்யும் பொழுது நமது நாட்டினுடைய பொருளாதாரத்திற்கும் ஒரு வளர்ச்சிக்கான வாய்ப்பு ஏற்படும் என்ற அடிப்படையிலே இந்த மாருதி சுசூகி நிறுவனத்தினுடைய புதிய ஆலையை பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்திருக்கின்றார்கள்.

தோஷிபா ஜென்சோ மற்றும் சுசூகினிியினுடைய கூட்டு முயற்சியிலான பேட்டரி உற்பத்தி ஆலையும் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே இந்தியாவினுடைய சந்தையில் டாட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய மின்சாரக்கார் விற்பனையை தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையில் தான் அதேபோன்று ஒரு மிகப்பெரிய சந்தையை இந்தியாவில் வைத்திருக்கக்கூடிய மாருதி சுசூகி நிறுவனமும் மார்ச் எரிபொருளான மின்சாரக்கார் உற்பத்தியை பிரதமரை வைத்து தற்பொழுது தொடங்கி இருக்கின்றார்கள்.