இந்திய கூட்டணி சார்பில் தற்பொழுது குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தியா கூட்டணி கட்சிகளுடைய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மயில்சாமி அண்ணாதுறை விஞ்ஞானி உள்ளிட்டோருடைய பெயர்கள் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அது மட்டுமல்லாமல் நீதிபதி பெயர் என பல பெயர்கள் பரிசனையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான் தற்பொழுது அவர்கள் இறுதியாக ஒரு பெயரை தேர்வு செய்து தங்களுடைய வேட்பாளராக அறிவித்திருக்கின்றார்கள் அதன்படி இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தினுடைய முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
எனவே தற்பொழுது இந்திய குடியரசு துணை தலைவருக்கான தேர்தலானது தற்பொழுது நடைபெற இருக்கின்றது.
ஏனென்றால் சிபி ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் அவரை அனைவருமே ஒருமனதாக தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு தேசிய ஜனநாயக கூட்டணியானது மேற்கொண்டது.
ஆனால் தற்பொழுது இந்திய கூட்டணி சார்பில் நீதிபதி சுதர்சன் ரெட்டி தற்பொழுது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறுவது என்பது உறுதியாக இருக்கின்றது.
நீதிபதி சுதர்சன் ரெட்டியை பொறுத்தவரையில் 2007 முதல் 2011 வரையில் அவர் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி இருக்கின்றார்.
ஜூலை 1947ல் பிறந்த நீதிபதி ரெட்டி ஆந்திர பிரதேச பார் கவுன்சில்லில் ஹைதராபாத்தில் ஒரு வழக்கறிஞராக பதிவு செய்திருந்தார்.
ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் ரிட் மற்றும் சிவில் விவகாரங்களில் அவர் பயிற்சி வைத்திருக்கின்றார்.
1995 அன்று ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு குகாசி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் வைத்திருந்தார்.
பின்னர் உச்சநீதிமன்றத்திற்கு அவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தான் தற்பொழுது அவர் இந்திய கூட்டணி கட்சி சார்பில் தற்பொழுது குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக உச்சநீதிமன்றத்தினுடைய முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.








