ஜனநாயகன் திரைப்படத்தின் சான்டல் தட்டுதல் விவகாரத்தில், தளவீத தலைவர் விஜய்க்கு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
தலைவர் விஜயின் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றுதல் கிடைக்காததால் படம் வெளியாவதை தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஜனநாயகன் படத்திற்கு ஆரம்பம் முதலே தமிழ்நாடு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசு சென்சார் போர்டை ஆயுதமாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜனநாயகன் படத்தை தடுக்கத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சியை தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள், மிஸ்டர் மோடி” என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவிப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.








