Home உலகம் “ஈரான் ரியால் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவு”

“ஈரான் ரியால் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவு”

டாலருக்கு நிகரான ஈரானின் ரியால் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது. ஈரானில் பொருளாதார விழ்ச்சியின் பின்னர் அந்நாட்டு அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

இதனை கண்டித்து அமெரிக்க அரசு போர்கப்பல்களையும் படை வீரர்களையும் ஈரான் நோக்கி குவித்துள்ளது. இந்நிலையில், ஈரானின் கரன்சியான ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு 15 லட்சமாக வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

இந்த மாதத்தில், ரியால் அதன் 5% மதிப்பை இழந்துள்ளதாக ஈரானின் பண மதிப்பை கணக்கிடும் இணையதளம் தெரிவித்துள்ளது.