Home வணிகம் மேலும் கிடுகிடு உயர்வு பெண்களுக்கு அதிர்ச்சி :

மேலும் கிடுகிடு உயர்வு பெண்களுக்கு அதிர்ச்சி :

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மேற்கு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து கிலோவிற்கு 10 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த விற்பனை விலையில் 1 கிலோ தக்காளி 60ஆகவும் ,சிலரை கடைகளில் கிலோ தக்காளி 70 முதல் 80 ரூபாயாக விற்பனையாகிறது. வரத்து குறைவால் தக்காளி ஒரே நாளில் கிலோவுக்கு ₹10 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு மழை காரணமாக நாளுக்கு நாள் வரத்து குறைந்து வருவதால் விலை அதிகரித்து வருகிறது. நேற்று கிலோவுக்கு ₹5 உயர்ந்திருந்த நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் ₹10 விலை உயர்ந்திருக்கிறது.

மொத்த விற்பனையில் நேற்று கிலோ ₹50 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் ₹10 அதிகரித்து, முதல் தர தக்காளி கிலோ ₹60, சில்லறை விற்பனை கடைகளில் ₹70 முதல் ₹80 விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ச்சியாகவே கடந்த இரண்டு வாரங்களாகவே தக்காளி விலை என்பது ₹40 முதல் ₹45 விற்பனை செய்யப்பட்டது. நேற்று முதல் ₹5 விலை உயர்ந்தது. இன்று ஒரே நாளில் விலை இருந்து. ₹60 ₹10 விலைந்து ₹60 கிலோ ₹60 விற்பனை செய்யப்படுகிறது.

வரக்கூடிய நாட்களிலும் மழை காரணமாக வரத்து மேலும் குறைய வாய்ப்பு இருப்பதால் தக்காளியின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

கோயம்பேடு சந்தையை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 1,200 டன் தக்காளி தேவைப்படும் நிலையில், கடந்த ஒரு வார காலமாகவே 800 முதல் 850 டன் தக்காளி மட்டுமே வரத்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வரக்கூடிய நாட்களில் விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் வியாபாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.