நாளை .அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு எந்தவிதமான தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
அனிருத் நாளை சென்னை கிழக்கு கடற்க்கரைச்சாலை பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்திருக்கிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி இல்லாமல் நடத்தப்படுவதால் இதற்கு தடைவிதிக்க வேண்டும் என கூறி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் மாவட்ட நிர்வாகத்திடம் எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பு ஏற்படுவதாகவும் எனவே நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக அவசர வழக்காக இப்பொழுது எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதி ஏன் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது என மனுதார் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும் காவல்துறை தரப்பில் உரிய அனுமதியுடன் தான் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் முறையாக அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது .
அப்போது நீதிபதி காவல்துறையின் விதித்த நிபந்தனைகளை உரிய முறையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும் இசை நிகழ்ச்சியால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நீதிபதி இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கூறி தொடங்கப்பட்ட வழக்கின் விசாரணை வருகின்ற வியாழக்கிழமை அன்று தள்ளிவைத்து உத்தரவிட்டிருக்கின்றார்.








