Home திரையுலகம் “பிரபல பாடகரின் மகன் போலீஸ் ஸ்டேஷனில் – என்ன காரணம் தெரியுமா?”

“பிரபல பாடகரின் மகன் போலீஸ் ஸ்டேஷனில் – என்ன காரணம் தெரியுமா?”

பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் மகனான எஸ்.பி சரணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி சரண் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் சினிமா உதவி இயக்குனர் தரவேண்டிய 23 மாத வாடகை தொகையை கேட்டதால் அவர் கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

பிரபல பாடகரும் எஸ்.பி பாலசுப்பிரமணியத்துடைய மகனுமான எஸ்.பி சரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது .

சென்னை நுங்கம்பாக்கம் காந்தம்தார் நகர் பகுதியில் பிரபல பாடகர் எஸ்.பி சரண் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் இவர் இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டை கடந்த 2017 ஆம் ஆண்டு சினிமாவின் உதவி இயக்குனராக இருக்கக்கூடிய திருஞானம் என்பவருக்கு 35,000 ரூபாய் வாடகை என அவருக்கு விற்றிருக்கிறார்.

மேலும் அவரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் முன்பணமாகவும் பெற்றிருக்கிறார் இந்த நிலையில் திருஞானம் என்பவர் மாதம்தோறும் வாடகை சரிவர செலுத்தாமல் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மூன்று மாதத்துக்கு ஒருமுறை செலுத்திருக்கிறார்.

இதனால் சரண் தன்னுடைய வீட்டை காலி செய்யுமாறு அவர் அறிவுத்திருக்கிறார் இதனை அடுத்து முன்பணம் கொடுத்த பணமாக இருக்கக்கூடிய ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்திலிருந்து கடந்த 23 மாதமாக அந்த வாடகைகளை கழித்திருக்கிறார்.

இதனை அடுத்து கடந்த 30ஆம் தேதி சரண் உதவி இயக்குனரிடம் வீட்டு வாடகையை திருப்பித் தருமாறு கேட்டிருக்கிறார். அப்பொழுது திருஞானம் வீட்டை காலி செய்ய முடியாது எனவும் சரணை தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சரண் கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார்அளித்து இருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் கே.கே நகர் போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொடர்ச்சியாக இதுபோன்று சினிமா பிரபலங்கள் மூலம் வரக்கூடிய புகார்களை தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எஸ்.பி. பாலசுப்பிரமணத்தினுடைய மகன் சரண் புகார் மனு அளித்திருப்பது தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.