Home திரையுலகம் “சுங்கத்துறை அதிரடி: பிரபல நடிகர்கள் வீடுகளில் சோதனை பரபரப்பு”

“சுங்கத்துறை அதிரடி: பிரபல நடிகர்கள் வீடுகளில் சோதனை பரபரப்பு”

மலையாள திரைப்பட நடிகர்கள் துல்கர் சல்மான் பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் குறிப்பாக நடிகர்கள் துர்கல் சர்மான் மற்றும் பிரிதவிராஜ் ஆகிய வீடுகள்ல ரைடு என்பது தற்பொழுது நடைபெற்று வருகிறது.

கேரளாவில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில சுங்கத்துறை அதிகாரிகள் ரைடு மேற்கொண்டு வரக்கூடிய நிலையில் பிரபல நடிகர்களாக இருக்கக்கூடிய துல்கர் சல்மான் மற்றும்பிருத்விராஜ் விராஜ் அவருடைய வீடுகளிலும் இந்த ரைடு நடைபெற்று வருவதாகவும் ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் சுங்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

குறிப்பாக முறையாக வரிகட்டாமல் பூட்டான் வழியாக இந்தியாவுக்குள் வெளிநாட்டின் சொகுசுக்கார்கள் கொண்டுவரப்படுவதாக ஒரு புகார் எழுந்திருக்கிறது. அந்த புகார் தொடர்பாக திருவனந்தபுரம், கோட்டையம், கோழிக்கோடு என கேரளாவில் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்கிறார்கள்.

அந்த வகையில் திருவனந்தபுரத்தில் இருக்கக்கூடிய நடிகர் பிருத்விராஜ் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. எந்த வாகனமும் இல்லாததால் அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து கேரளாவினுடைய பிரபல நடிகராக இருக்கக்கூடிய துல்கர் சல்மான் அவருடைய வீடுகளிலும் சுங்கத்துறை அதிகாரிகள் ரைடு நடத்தி வருவதாகவும் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் சோதனைக்கு பிறகாகவே என்ன ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.