Home தமிழகம் “தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம்: டெண்டர் அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு”

“தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம்: டெண்டர் அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு”

தஞ்சையில் அமைய உள்ள சோழர் அருங்காட்சியகத்துக்கான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2023 ஆம் ஆண்டு மாநில பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழ்நாட்டின் முதல் பேரரசுக்கான அருங்காட்சியகம் என்ற இந்த அறிவிப்பு மக்களின் நெடுநாள் கனவாக இருந்து வந்தது. இந்நிலையில், தமிழ் மக்களின் கனவு நனவாகும் வகையில், சோழர் அருங்காட்சியகத்துக்கான டெண்டரை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, 1 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழ்நாடு அரசு, டெண்டருக்கான விண்ணப்பங்களை ஜனவரி 7 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

அதேபோல், இந்த திட்டப் பணிகளை இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் எனவும் அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.