சென்னை ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கொட்டும் மழையிலும் கடற்கரையிலிருந்து சிலர் குடையுடன் வந்து கடலை ரசித்து வருகின்றனர். ஆனால் பலர் அதிக மழை காரணமாக கடலை விட்டு வெளியேறுகின்றனர்.
அதாவது, சென்னை ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் பகுதிகளைப் பொறுத்தவரை மாலையிலிருந்தே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஈசிஆர் பகுதியைச் சேர்ந்த திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், அக்கரை, பனையூர், கானத்தூர், முத்தண்டி, கோவளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக கடற்கரைக்கு வந்த பொதுமக்களில் பலர் கடலை விட்டு வெளியேறுகின்றனர். இருப்பினும், ஒரு சிலர் கொட்டும் மழையிலும் குடையுடன் நின்று கடலின் அழகை ரசித்து வருகின்றனர்.








