நகைக் கடைகளில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரவிய தகவலுக்கு தமிழக அரசின் தகவல் சரிப்பார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இதற்கு தமிழக அரசின் தகவல் சரிப்பார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சில நகைக் கடைகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது தமிழ்நாட்டில் நடைமுறையில் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.








