Home உலகம் “மிகவும் ஆச்சரியமான மீட்பு: 10 வருடங்கள் கழித்து நாய் வீட்டிற்கு திரும்பியது!”

“மிகவும் ஆச்சரியமான மீட்பு: 10 வருடங்கள் கழித்து நாய் வீட்டிற்கு திரும்பியது!”

அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன வளர்ப்பு நாய் மீண்டும் தன் உரிமையாளரிடம் சேர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநில சாலையில் சுற்றி திரிந்த நாயை விலங்குகள் நல ஆர்வலர்கள் மீட்டனர். அப்போது நாயின் உடலில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருந்ததை அவர்கள் கண்டறிந்து, மைக்ரோசிப் மூலம் நாயை அதன் உரிமையாளரிடம் சேர்ந்தனர்.

நாயை கண்டதும் உரிமையாளர் இன்ப அதிர்ச்சியில் உரிந்தனர். 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நாய், தாங்கள் பொருத்திய சிப்பின் மூலம் மீண்டு வந்து சேர்ந்ததை எண்ணி அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.