இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் பெருமையுடனும் ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு, தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின், மற்றும் இயல்,இசை,நாடக மன்றத்திற்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.








