Home திரையுலகம் கேரள நடிகை பவித்ராமேனனின் கொந்தளிப்பு :

கேரள நடிகை பவித்ராமேனனின் கொந்தளிப்பு :

நடிகை ஜான்வி கபூருக்கு எதிராக கேரள நடிகை பவித்ராமேனன் கொந்தளித்து வீடியோ வெளியிட்டூள்ளார். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவிலிருந்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி பிசியாக நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் சித்தார்த் மல்யோத்ரா ராவுடன் பரம் சுந்தரி என்ற படத்தில் மலையாளி பெண்கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் ஜான்வி கபூரின் நடிப்பை பார்த்த மலையாளிகள் பலரும் அவரை விமர்சித்து வந்த நிலையில் நடிகை பவித்ரா மேனனும் தனது இன்ஸ்டாகராம் பக்கத்தில் ஜான்விக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு வீடியோவை பகிர்ந்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதில் நான் ஒரு மலையாளி பரம்சுந்தரி படத்தின் ட்ரைலரை பார்த்தேன். அதில் ஜான்வியின் கதாபாத்திரம் உச்சரிப்பு பிழைகளுடன் தன்னை கேரளப் பெண் என்று அறிமுகப்படுத்தும் காட்சி இருக்கிறது.

சரியான மலையாள நடிகர்களை நடிக்க வைப்பதில் என்ன பிரச்சனை நாங்கள் திறமை குறைந்தவர்களா? கேரளாவில் யாரும் இப்படி பேசுவதில்லை எனவும், அவர் ஜான்வியை விமர்சனம் செய்துள்ளார்.

We don’t wear just ஜாஸ்மின் flowers and do மோனி ஆட்டம் every walk around the ஆபீஸ் and house. மேலும் பேசிய அவர் நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்றால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாமா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.

நான் எப்படி மலையாளத்தில் பேசுகிறேனோ அதேபோல் ஹிந்தியிலும் நன்றாக பேசுவேன் என அதில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் மலையாள நடிகர்களின் புகைப்படங்களை பகிர்ந்த பவித்ராமேனன் ஹிந்தி படத்தில் மலையாளி
கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு மலையாளியை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமா என்ற கேள்வியையும் கேட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் ஜான்வி கபூரின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.