பானிப்பூரியில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள் உள்ளதா? அதை பத்திதான் நம்ம இப்ப பார்க்க போறோம். பூரியுடன் வழங்கப்படும் புளிப்பான நீர் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கும். புதினா, கொத்தமல்லி பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து புளி கரைசலுடன் சேர்த்து அதை தயாரிக்க வேண்டும்.
ஆனால் அதில் பச்சை நிறத்தை கூடுதலாக்கி காட்டுவதற்காக ஆப்பிள் கிரீன்(Apple Green) எனும் நிறமி சில இடங்களில் சேர்க்கப்படுவதா கூறப்படுகிறது. கால் லிட்டர் நீரில் சிறிதளவு கலந்தாலே மிக பளிச்சுனு பச்சை நிறம் (Bright green color) கிடைக்கும் என்று சொல்றாங்க.
சிறிய பூரிகள் மொத்த வியாபாரியிடமிருந்து வாங்கப்படுகின்றன. வெகு சில கடைகளில் மட்டுமே அவை புதிதாக தேவைக்கேற்ப தயாரிக்கப்படுகிறது. அந்த பூரிகள் வெகு நாட்கள் கெடாமல் சட்டென்று உடையும் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் பளிச்சன மஞ்ச நிறத்தில் இருப்பதற்காகவும் சன்செட் எல்லோ(Sunset Yellow) என்ற நிறமி பயன்படுத்தப்படுகிறது.
இதில் வழங்கப்படும் மசாலாவில் ஆரஞ்சு போன்ற நிறத்தை வழங்க டார்ட்ரசைன் (Tartrazine) என்ற நிறமி பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதி பொருட்களை நெடுநாள் தொடர்ந்து உட்கொண்டால் சிறுநீரகம் கல்லீரல் பாதிக்கப்படும்.
உடலில் உள்ள சிவப்பு அணுக்கள் தட்டணுக்கள் எண்ணிக்கை குறையலாம். கொழுப்பு சத்து அதிகரிக்கலாம். கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பிற்காலத்தில் நரம்பு வளர்ச்சி நோய்கள் ஏற்படலாம்னு சொல்றாங்க.
இந்த வேதி பொருட்கள் மரபணு பிறழ்வை (Genetic predisposition) ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் மிக அதிகமாக உட்கொள்ளும்போது உடலில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கவும் வாய்ப்புண்டு என்று எச்சரிக்கின்றன இனி பானிப்பூரி கடைக்கு பக்கத்தில் செல்லும்போது ஜாக்கிரதையாக இருங்க








