.
டெல்லியில் 11000 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
டெல்லியிலே 11,000 கோடி மதிப்பீட்டிலான இந்த தேசிய நெடுஞ்சாலை திட்டம் என்பது இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கான திட்டங்களாக இருக்கின்றன.
துவாரகா விரைவுசாலையிலே 10 கிலோமீட்டர் நீளத்திற்கு டெல்லி பிரிவில் 5,360 கோடியில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய சாலை பணிகளை நிறைவடைந்த நிலையில் திறந்து வைத்திருக்கின்றார் பிரதமர் அவர்கள்.
அதுமட்டுமல்லாமல் அலிப்பூர் முதல் டிஜான் களான் வரை அர்பன் எக்ஸ்ட்யூஷன் ரோடு இரண்டு என்ற பிரிவிலே அந்த 5,580 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டிருந்தது. அதையும் திறந்து வைத்திருக்கின்றார்.
இந்த துவாரகா திரைவுசாலை காரணமாக உத்தர பிரதேசத்தினுடைய அந்த நோயடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டெல்லி விமான நிலையம் வருவோருக்கான பயண நேரம் 20 நிமிடமாக குறையும் என்ற தகவலையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கின்றது.
டெல்லி விமான நிலையத்தை நோயடா உள்ளிட்ட தொழில் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேசத்தை ஒட்டி இருக்கக்கூடிய டெல்லி பகுதியில் இருந்து வந்தடையக்கூடிய மக்களுக்கு உதவக்கூடிய விதமாக இந்த இரண்டு சாலை பணிகளும் நடைபெற்று வந்தன.
அதன் அடிப்படையில் தான் இந்த துவாரகா விரைவுசாலை என்பது 10 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக 5360 கோடியில் அமைக்கப்பட்டிருந்தது.
ஒட்டுமொத்தமாக 11000 கோடி மதிப்பீட்டிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தற்பொழுது தொடங்கி வைத்துள்ளார்.








