உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் மாணவர்கள் செய்தித்தாள் வாசிப்பதை கட்டாயமாக்கி அந்த மாநில அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
அதேபோல், உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வதற்கும், செய்திகளை புரிந்து கொண்டு அவற்றை பகுப்பாய்வு செய்யும் திறனை வளர்த்துக் கொள்ளவும் இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








