அக்டோபர் 1றஆம் தேதி வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என சென்னை வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வாநிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 60 கிலோமீட்டர் வேகத்திற்கு சூரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மும்பை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மும்பை நகரத்தில் இம்மாதத்தில் இதுவரை 606.1மில்லிமீட்ட மழை பொழிந்துள்ளது. இது 21க்கு பிறகு செப்டம்பரில் பதிவான அதிகபட்ச மழை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஞாயிறு காலையிலிருந்து திங்கட்கிழமை காலை வரை மும்பையின் பல்வேறு பகுதிகளில் 100மில்லிமீட்டக்கு மேல் மழை பதிவானது. கொலாபாவில் 101.2 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது. மும்பை மாநகராட்சியின் மேற்கு கிழக்கு புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குஜராத்தின் நவ்சாரி மற்றும் வால்சாத் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நவ்சாரி மாவட்டத்தில் சுமார் 1500 வீடுகள் சேதமடைந்துள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்ததால் தோட்டக்கலை துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வால்சாத் மாவட்டத்தில் பெய்த கனமழையால் மரங்கள் மின்கம்பங்களும் சாய்க்கின்றன. சேதங்களை முழுமையாக மதிப்பிட இரண்டு நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சூரை காற்றினால் இரு மாவட்டங்களிலும் சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கருவா பந்தல்கள் சரிந்து விழுந்தன. இரண்டு மாவட்டங்களிலும் சேதங்களை மதிப்பிட தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.








