Home இந்தியா “பயிர் வளர்ற நிலம்னு நினைச்சோம்… வைரம் முளைக்குற நிலம்னு தெரியலையே!”

“பயிர் வளர்ற நிலம்னு நினைச்சோம்… வைரம் முளைக்குற நிலம்னு தெரியலையே!”

ஆந்திராவின் ராகசீமாவில் மழை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வைரவேட்டைக்கு ஆயுதமாகி உள்ளனர். ஆந்திராவின் வைரம் விளையும் மண்ணாக ராகசீமா கருதப்படுகிறது.

மழை காலங்களில் பூமியில் வைரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் வைரவேட்டையை தொடங்குகின்றனர்.

ஜோடகிரி, துக்காலி, மரவலி மண்டலங்களில் பலரும் வைரத்தை தேடி வருகின்றனர். வைரக்கற்கள் மழை காலங்களில் மண்அரிப்பு காரணமாக வெளியே தெரிவதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள விவசாய நிலங்களில் அடிக்கடி வைரம் கிடைத்து வருவதால் விவசாயிகள் வைரவேட்டையை தீவிரப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.