Home இந்தியா “தூங்கும் வசதி வந்தே பாரத்: குறைந்த தூரம் பயணித்தாலும் முழு கட்டணமா?”

“தூங்கும் வசதி வந்தே பாரத்: குறைந்த தூரம் பயணித்தாலும் முழு கட்டணமா?”

பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களில், எவ்வளவு குறைந்த தூரம் பயணித்தாலும் குறைந்தபட்சமாக 400 கிலோமீட்டருக்கான கட்டணமே வசூலிக்கப்படும்.

இந்த ரயில்களின் கட்டண விவரங்களை ரயில்வே துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பயணிகள் குறைந்தபட்சம் 400 கிலோமீட்டருக்கான கட்டணத்தை கட்டாயமாக செலுத்த வேண்டும்.

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு என அனைத்து வகுப்புகளும் ஏசி வசதியுடன் மட்டுமே இருக்கும்.

400 கிலோமீட்டர் வரை

  • முதல் வகுப்பு ஏசி பெட்டிக்கு ₹1,520
  • இரண்டாம் வகுப்பு ஏசிக்கு ₹1,240
  • மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிக்கு ₹960
    என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

400 கிலோமீட்டருக்கு மேற்பட்ட பயணத்திற்கு, ஒவ்வொரு கிலோமீட்டருக்கும்

  • முதல் வகுப்புக்கு ₹1.20
  • இரண்டாம் வகுப்புக்கு ₹3.10
  • மூன்றாம் வகுப்புக்கு ₹2.40
    என கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு மேலாக ஜிஎஸ்டியும் விதிக்கப்படும்.

இந்த ரயில்களில் மின்னணு முறையில் (டிஜிட்டல் பேமெண்ட்) மட்டுமே கட்டணம் ஏற்றுக் கொள்ளப்படும். இதனால், டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் 34 மணி நேரத்திற்குள் ரீபண்ட் வழங்க முடியும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

கவுண்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கும் மின்னணு முறையே பின்பற்றப்படும்.

தூங்கும் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களில் உறுதி செய்யப்பட்ட (Confirmed) டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.
RAC மற்றும் காத்திருப்பு பட்டியல் (Waiting List) டிக்கெட்டுகள் வழங்கப்படமாட்டாது.