கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை அருகே, திருமணம் நடைபெற்று இரண்டு மாதங்களே ஆன இளைஞர் தாமிரபரணி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முதுக்குமல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரி (28). இவர் ஆந்திராவில் வழக்கறிஞர் படித்து வந்த நிலையில், சாகினிகா என்பவரை இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
மனைவி கர்ப்பம் தரித்திருக்கும் நிலையில், குளித்துறையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்ற ஜெரி, விடுதியின் பின்புறம் ஓடும் தாமிரபரணி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








