உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா கூட செய்ய தயங்கிய ஒரு விஷயத்தை நம் இந்தியா செய்து முடித்து, உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
இந்திய ராணுவத்தின் பலத்தை பல மடங்கு அதிகரிக்கப் போகும் ஒரு பிரம்மாண்ட தொழில்நுட்பம் இப்போது தயாராகியுள்ளது. பீரங்கிகள் என்றாலே குறிப்பிட்ட தூரம் வரைதான் சுட முடியும் என்ற வரலாற்றை மாற்றியமைக்க வருகிறது இந்தியாவின் புதிய ராம்ஜெட் தொழில்நுட்பம்.
ஆம், உலகிலேயே முதன்முறையாக 155 மிமீ பீரங்கி குண்டுகளில் ராம்ஜெட் தொழில்நுட்பத்தை புகுத்தி சாதனை படைக்க உள்ளது இந்திய ராணுவம்.
பொதுவாக இந்த ராம்ஜெட் இன்ஜின்கள் ஏவுகணைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் முதன்முறையாக பீரங்கி குண்டுகளிலேயே இதை பொருத்தி, அதை ஒரு மினி ஏவுகணை போல மாற்றியுள்ளனர்.
இந்த பெருமை முழுவதும் நம் சென்னை ஐஐடி பேராசிரியர்களுக்கே சேரும். பல வருடங்களாக நடந்த ஆராய்ச்சியின் பலனாக, ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இது சாத்தியமாகியுள்ளது.
இது எப்படி வேலை செய்கிறது தெரியுமா? இது ஒரு ஏர்-ப்ரீத்திங் இன்ஜின். அதாவது, பீரங்கியிலிருந்து குண்டு வெடித்து சீறிப் பாயும் போது, ஒளியின் வேகத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் செல்லும்.
அப்போது காற்றில் உள்ள ஆக்சிஜனை இது தானாகவே உறிஞ்சி, அதற்கான எரிபொருளை எரித்து கூடுதல் உந்துசக்தியை உருவாக்குகிறது. இதனால் என்ன பயன் என்றால், சாதாரண பீரங்கி குண்டுகள் பாயும் தூரத்தை விட 50% அதிக தூரம் பயணித்து, எதிரிகளின் எல்லைக்குள் வெகுதூரத்தில் உள்ள இலக்குகளையும் துல்லியமாக தாக்க முடியும்.
ஏற்கனவே போக்ரான் தளத்தில் நடந்த அனைத்து சோதனைகளும் மெகா ஹிட் ஆக வெற்றி பெற்றுள்ளன. இதில் இன்னொரு சிறப்பான விஷயம் என்னவென்றால், இதற்காக ராணுவம் புதிய பீரங்கிகளை வாங்க வேண்டிய அவசியமே இல்லை.
ஏற்கனவே நம்மிடம் உள்ள அமெரிக்காவின் M777 போன்ற பீரங்கிகளிலேயே இந்த நவீன குண்டுகளை பயன்படுத்த முடியும்.
பீரங்கி குண்டுக்குள் ஒரு ராக்கெட்டை மறைத்து வைத்து அனுப்பும் இந்த தொழில்நுட்பம், விரைவில் ராணுவத்தில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
எல்லைகளை இனி எதிரிகள் வலுவிழக்க நினைத்தால், இந்தியாவின் இந்த புதிய ஆயுதம் தகுந்த பாடம் புகட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.








