முதல் முறையாக திருச்சிராப்பள்ளி சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
சூரியூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 668 காளை மாடுகளும் 334 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 13 காளைகளை பிடித்த மூர்த்தி என்ற இளைஞருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கார் பரிசாக வழங்கினார்.
இரண்டாம் பரிசாக 11 காளைகளை பிடித்த யோகி என்ற இளைஞருக்கு இருச்சக்கர மின்சார வாகனம் பரிசளிக்கப்பட்டது.
பரிசுகளை திருவெரும்பூர் தாசில்தார் தனலட்சுமி மற்றும் கிராம கமிட்டி நிர்வாகிகள் வழங்கினர்.
மாட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 63 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் ஒன்பது பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாடுகளை அடக்கிய மாவீரர் மூர்த்தி அவர்களுக்கு, இப்பொழுது திருவெரும்பூர் வட்டாட்சியர் அவர்கள் கிராமத்தின் சார்பாகவும் கிராம மக்கள் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.








