75 நாடுகளுக்கான அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பொது நலத் திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான குடியேற்ற விசா செயலாக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில் ஈரான், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், ரஷ்யா உள்ளிட்ட முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை, தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் சார்ந்திருக்கும் குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளிலிருந்து வரும் விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தப்படுகின்றன.
புதிய குடியேற்றவர்கள், அமெரிக்க மக்களின் செல்வத்தை சுரண்ட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வரை, இந்த இடைநிறுத்தம் தொடரும் என தெரிவித்துள்ளது.








