இயல் இசை நாடகம். இசையும் நகைச்சுவையும் அது எப்பவுமே வந்து ஒரு மனுஷனை வந்து குழந்தையா மாற்றிவிடும் . எவ்வளவு மனஅழுத்தம் இருந்தாலும் நமக்கு பிடிச்ச பாடல் கேட்கும்போது அப்படியே குழந்தையா மாறிருவோம்.
நகைச்சுவையும் அதே மாதிரிதான் எவ்வளவு மனஅழுத்தம் இருந்தாலும் வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்ன்னு சொல்லுவாங்க.
அந்த மாதிரி இயல் இசை நாடகம் அப்படிங்கறது மூணையும் சேர்த்து அவ்வளவு அழகா இங்க வந்து பண்ணிக்கிட்டு இருக்காங்க. சகோதரிக்கும் அந்த குழுவிற்கும் . இங்க வந்திருக்க எல்லாருமே சிங்கர் நாங்க சும்மா வந்து ஏதோ பாடுறோம்.
பட் வரவங்க எல்லாம் அசால்ட்டா பாடுறாங்க. அதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அடுத்தடுத்த வருஷம் இன்னும் சிறப்பா இந்த நிகழ்வு வந்து கொண்டாடிக்கிட்டே இருக்கணும். அதுல எங்களுடைய பதிவு இருந்துகிட்டே இருக்கும்.
போதைன்னா எல்லாரும்தான் எனக்கு கை தட்டல ஒரு மிகப்பெரிய போதை. அதுக்கு நான் அடிட்டு நாலு பேர் கை தட்டுனா அங்க நின்னு இரண்டு மணி நேரம் நிகழ்ச்சி பண்ணுவேன். அது என்னுடைய போதை.
அது மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒரு போதை இருக்கு. அதை நம்ம ஒன்னுமே சொல்ல முடியாது. அது நமக்கு வேணாம். எந்தெந்த நிகழ்வுக்கு வரோமோ அந்தந்த நிகழ்வுக்கான கேள்விகள் மட்டும் கேளுங்க.
நான் நிறைய ப்ரமோஷன் பண்ணிட்டு இருக்கேன். இன்னைக்கு சென்னையில் தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகளுடைய ஒட்டுமொத்த அதிகாரிகளுக்கும் நான்தான் வந்து ஒரு பிராண்ட் அம்பாசிட்ரா எல்லா இடத்துக்கும் போறேன்.
ஸ்கூல் காலேஜ் எல்லாம் வந்து மோட்டிவேஷன் பண்றேன். அது அவங்களுக்கு எப்பவுமே தனிப்பட்ட விஷயம். இந்த நிகழ்வு வந்து ரொம்ப அற்புதமான நிகழ்வு. சோ தேங்க்யூ.








