Home தமிழகம் “விநாயகர் சிலை கரைப்பு விழா – சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நாளை மாபெரும் திருவிழா; பிரமாண்ட...

“விநாயகர் சிலை கரைப்பு விழா – சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நாளை மாபெரும் திருவிழா; பிரமாண்ட ஏற்பாடுகள் தீவிரம்!”

பட்டினப்பாக்கம் கடற்கரையில் நாளை விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிலைகளை தூக்குவதற்காக பெரிய ராட்ச கிரேன்கள் வரவழைக்கப்பட்ட நிலையில் ஐந்து கண்காணிப்பு கோபுரங்கள், கடற்கரையை சுற்றிலும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கடந்த 27ஆம் தேதி கொண்டாடப்பட்டிருக்கக்கூடிய நிலையில் விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கக்கூடிய பெரிய சிலைகளை கடற்கரைகளில் கரைக்கும் வழக்கத்தை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

ஆற்றங்கரையோர பகுதிகளிலும் கடற்கரையோர பகுதிகளிலும் இந்த நிகழ்வுகள் நடைபெறும். சென்னையை பொறுத்தவரை குறிப்பாக இந்த சிலைக்கரைப்பு இடங்களாக சீனிவாசபுரம் பட்டினப்பாக்கம் நீலாங்கரை திருவான்மையூர் பல்கலை நகர் மீன்பிடி துறைமுகம் புதுவண்ணாரப்பேட்டை திருவற்றியூர் பாப்புலர் இடைமடை உள்ளிட்ட பகுதிகளில் சிலைக்கரைப்பு நிகழ்வுகள் நடைபெறும் .

பட்டினப்பாக்கம் பகுதியை பொறுத்தவரை இந்த பெரிய விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டு இந்த சிலை கரைப்பு நிகழ்வு நடைபெறும் .

அந்த அடிப்படையில் இந்த ஆண்டை பொறுத்தவரை ஐந்து கண்காணிப்பு கோபுரங்கள் அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பட்டினம்பாக்கம் சாலையில் இருக்கக்கூடிய மின்விளக்குகளில் மின் கம்பங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட இருக்கிறது.

கடற்கரை பகுதிகளில் இருக்கக்கூடிய பகுதிகளில் மட்டும் 1600 காவல் துறையினரும் ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்டவையும் தயாராக இருப்பதாகவும் மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வளர்கள் உள்ளிட்டவர்களும் இந்த சிலை கரைப்பு நிகழ்வுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளும் உதவி மையங்களும் கூட அமைக்கப்பட்டிருக்கின்றன ஏற்கனவே கடந்த ஆண்டை பொறுத்தவரை காலை முதல் இரவு வரை அதிகப்படியான சிலைகள் கரைப்பதற்கு வந்த நிலையில் மூன்று கிரேன்கள் வைக்கப்பட்டிருந்தன.

அது பத்தாத சூழல் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது அதிகப்படியாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படாமல் இருப்பதற்காக ஐந்து கிரேன்கள் என்ற வகையில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் பெரிய சிலைகளை ஏற்றி வரும் வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக ஒரு அடிக்கு மேல் இந்த கடற்கரை மணலுக்கு மேலாக மண் கொட்டப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து நாளைய தினம் காலை முதல் இந்த சிலைக்கரைப்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 15,000 காவல் துறையினர் இதற்கான பாதுகாப்பு பணியிலும் ஈடுபட இருக்கிறார்கள்.