Home உலகம் “பட்டாம்பூச்சி வடிவில் பிரபஞ்சம் – கோள்கள் பிறக்கும் வியப்பான தருணம்”

“பட்டாம்பூச்சி வடிவில் பிரபஞ்சம் – கோள்கள் பிறக்கும் வியப்பான தருணம்”

முன்னொரு காலத்தில் நாம் வாழும் பூமி எவ்வாறு தோன்றி இருக்கும் என்பதை புகைப்படமாக பார்த்தால் எப்படி இருக்கும் கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா அப்படிப்பட்ட கோள்கள் உருவாகும் அதி அதிசயத்தை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் புகைப்படமாக எடுத்துள்ளது.

பட்டாம்பூச்சி நட்சத்திரம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கோள்கள் உருவாக்கம் பற்றிய ரகசியத்தை விரிவாக பார்க்கலாம்.

இருண்ட வான்வழி அதில் பழிச்சிடும் வண்ணங்களுடன் இரண்டு இறகுகள் பட்டாம் பூச்சியின் தோற்றம் புதிய கொள்களுக்கான மாற்றம். சுமார் 450 கோடி
வருடங்களுக்கு முன்பு நாம் வாழும் பூமி எப்படி தோன்றி இருக்கும் என நம்மில் பலரும் கற்பனை செய்திருப்போம்.

அதற்கான விடையைத்தான் நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் கொடுத்திருக்கிறது. இதற்கு முன்பு ஹபில் போன்ற அதிநவீன டெலஸ்கோப்புகள் கோள்களின் தோற்றம் பற்றி புகைப்படங்களை எடுத்து இருந்தாலும் தற்போது ஜேம்ஸ் வெப் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் புருவத்தை உயர்த்தும் வகையில் அழகியலாக காட்சி அளிக்கிறது.

நமது சூரியனில்லிருந்து 525 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கக்கூடிய IRAS 04302+2247 என்கின்ற இளம் நட்சத்திரம்தான் பட்டாம்பூச்சி நட்சத்திரம்.

இந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையினால் சுற்றியுள்ள தூசி துகழ்கள்கள் ஈர்க்கப்பட்டு சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாக நமக்கு காட்சி அளிக்கிறது.

டாரஸ் நட்சத்திர உருவாக்க பகுதியில் இருக்கும் இந்த புதிதாக உருவாகி கொண்டிருக்கும் நட்சத்திரம் தன் சுற்றி பரப்பிலிருந்து இன்னும் வாயுவும் தூசியும் ஈர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறது.

இந்த தூசி துகல்கள் சுமார் 65 பில்லியன் கிலோமீட்டர் அளவிற்கு பரவியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சூரியனிலிருந்து கடைசி கோளான பப்ளூட்டோ வரையிலான தொலைவை விட பல மடங்கு அதிகம் என்றால் இதன் பிரம்மாண்ட ஈர்ப்பு விசையை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

கோள்கள் உருவாகும் செயல்முறையை புரிந்து கொள்ள இத்தகைய காட்சிகள் முக்கியமானவை. தூசி துகழ்கள் சுற்றுப்பட்டையின் மைய அடுக்கில் அடர்ந்து ஒன்றிணைந்து பின்னர் கோள்களின் அடித்தள கட்டமைப்புகளை உருவாக்குகின்றன.

இதேபோன்று 450 கோடி வருடங்களுக்கு முன்பு வாயு மற்றும் தூசுக்களின் இணைவினால் தான் நமது பூமியும் தோன்றியிருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஜேம்ஸ் டெலஸ்கோப்பில் இணைக்கப்பட்டுள்ள அகச்சிவப்பு கருவிகள் சுமார் 525 ஒளி ஆண்டுகள் தொலைவில் கோள்கள் உருவாக்கம் பற்றிய ரகசியத்தை படமாக பதிவு செய்துள்ளது.

2023ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் எல்டோ பொள்ளியிலிருந்து பிரபஞ்ச ரகசியத்தை கண்டறிந்து ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.

அதில் கோள்கள் உருவாக்கம் பற்றி கூறும் பட்டாமூச்சு நட்சத்திரத்தின் புகைப்படம் வான் வழியில் நடக்கும் அதிசயத்தை நாம் புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாக நாசா மற்றும் இஎஸ்ஏ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.