நேபாள நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடரும் வன்முறை போராட்டம் கிளர்ச்சி ஆகியவற்றால் பிரதமர் கேபி சர்மா ஒளி ராஜினாமாவை தொடர்ந்து இப்போது அதிபர் ராம்சந்திர பவுடலும் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்
அங்கு தொடர்ந்து அமைச்சர்கள் வீடு முற்றுகையிடப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றம் தீ வைத்து கொளுத்தப்பட்டிருக்கிறது. பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும். ஆட்சியை விட்டு அகழ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து பிரதமர் ராஜினாமா செய்த சிலமணி நேரங்களிலேயே அங்கு அதிபர் ராமச்சந்திர பவுடலும் ராஜினாமா செய்திருக்கிறார்.
ஏற்கனவே பல்வேறு துறைகளின் அமைச்சர்களும் ராஜினாமா செய்திருக்கிறார்கள். இங்கு இப்போது நாம் இன்னும் அந்த அமைச்சர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அங்கு தொலைத்தொடர்பு துறை அமைச்சரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. இதேபோல பல்வேறு அமைச்சர்களும் வீடுகளிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை அங்கு ஒரு அசாதாரணமான சூழ்நிலை நேபாள நாட்டில் நிலவுகிறது.
அங்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்தது மட்டும்தான் இந்த போராட்டத்திற்கு காரணமா அல்லது ஒட்டுமொத்தமாக அங்கு அமைச்சர்களும் அதிபர் பிரதமர் உள்ளிட்டோர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி மக்களின் கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அங்கு, Facebook மற்றும் YouTube, WhatsApp, Twitter உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. நேற்று போராட்டம் வெடித்ததை அடுத்து, நேற்று இரவு அந்த தடை நீக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.








