Home உலகம் ”பலத்த காற்றில் வீழ்ந்த சுதந்திர தேவி சிலை”

”பலத்த காற்றில் வீழ்ந்த சுதந்திர தேவி சிலை”

பிரேசிலில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாச்சு ஆப் லிபர்டி என அழைக்கப்படும் சுதந்திர தேவி சிலையின் மாதிரி சிலை, பலத்த காற்றினால் கீழே விழுந்தது.

குவையபா பகுதியில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் வீசிய கடுமையான காற்றின் காரணமாக, அந்த சிலை கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நியூயார்க்கில் அமைந்துள்ள 126 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுதந்திர தேவி சிலை உலகப் புகழ் பெற்றதாகும். அதன் மாதிரி சிலை பிரேசிலில் நிறுவப்பட்டிருந்த நிலையில், பலத்த காற்றினால் அது கீழே விழுந்தது.