Home உலகம் “உருகும் எரிமலை கடலுடன் கூடிய கோள் – வெளிவந்த அதிர்ச்சி ஆய்வு!”

“உருகும் எரிமலை கடலுடன் கூடிய கோள் – வெளிவந்த அதிர்ச்சி ஆய்வு!”

பாறைகள் உருகும் அளவுக்கு வெப்பம் இருந்தும் வளிமண்டலம் கொண்ட கோள் கண்டுபிடிப்பு!

சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள TOI 561b என்ற வெளிக்கோள் விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், மிக அதிக வெப்பத்தால் பாறைகள் தண்ணீர் போல உருகிக் கொண்டிருக்கும் இந்தக் கோளிலும் ஒரு தனித்துவமான அதிவெப்ப வளிமண்டலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் கோள் நமது பூமியை விட சுமார் 1.4 மடங்கு பெரியது மற்றும் தன் விண்மீனை வெறும் 11 மணி நேரத்தில் ஒருமுறை சுற்றிவரும் அரிய வகை கோளாகும். விண்மீனுக்கு மிக அருகில் இருப்பதால், அதன் ஒரு பக்கம் எப்போதும் பகலாகவும் மற்றொரு பக்கம் எப்போதும் இரவாகவும் உள்ளது. பகல் பகுதியில் பாறைகள் உருகி, பெரிய எரிமலை குழம்பு கடல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை இத்தகைய கோள்களில் வளிமண்டலம் இருக்க முடியாது என நம்பப்பட்ட நிலையில், TOI 561b-ல் கண்டறியப்பட்ட இந்த வாயுக்களால் ஆன வளிமண்டலம், வெளிக்கோள்கள் குறித்த நமது புரிதலை மாற்றும் முக்கிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. இந்தக் கோள் பூமிக்கு எந்த நேரடி ஆபத்தையும் ஏற்படுத்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.