Home Uncategorized “மரண வாசலில் நின்று… உயிர்க்கான கதவைத் திறந்த மூதாட்டி!”

“மரண வாசலில் நின்று… உயிர்க்கான கதவைத் திறந்த மூதாட்டி!”

புனித யாத்திரைக்கு பெயர் போன நகரமான பூரியில் நடந்த அதிசயம். இறுதி சடங்குகள் செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உயிருடன் எழுந்த பெண். இறந்துவிட்டதாக கருதப்பட்ட 86 வயதுடைய அந்த மூதாட்டி எப்படி மீண்டும் உயிருடன் வந்துள்ளார்.

ஆந்திராவை சேர்ந்த பி. லஷ்மி என்ற மூதாட்டி ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள போலசாரா பகுதியில் வசிக்கும் தனது மருமகனின் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது மருமகனின் வீட்டில் இருந்தபோது அவர் இறந்துவிட்டதாக குடும்பத்தினர்
தெரிவித்தனர்.

இது குறித்து அந்த மூதாட்டியின் குடும்ப உறுப்பினர் தர்ம செய்தி கூறுகையில் அவர்கள் கண்களை திறக்கவில்லை. மூச்சு விடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் அவர்கள் இறந்துவிட்டதாக நினைத்து அப்பகுதியில் உள்ள மற்றவர்களுக்கு தகவல் கொடுத்தோம்.

அதன் பிறகு இறுதி சடங்கிற்காக வீட்டிலிருந்து பூரியில் உள்ள தகன கூடத்திற்கு உடலை எடுத்து செல ஏற்பாடுகளை செய்தோம் என்று கூறினார். ஆனால் அந்த நேரத்தில் தான் திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது.

இறுதி சடங்கிறான சம்பிரதாயங்களை குடும்ப உறுப்பினர்கள் முடிப்பதில் மும்மரமாக இருந்தபோது தகன மேடை ஊழியர்களால் மூதாட்டி உயிருடன் இருப்பதாக தெரிய வந்தது

. இதை கேட்டதும் குடும்பத்தினர் அனைவரும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் திளைத்து போனார்கள்.

தகன கூடத்தின் மேலாளர் தகன சடங்குகளை செய்வதற்கு இறந்தவர் மற்றும் விண்ணப்பதாரரின் ஆதார அட்டைகள் மற்றும் இறப்பு சான்றிதழ் ஆகிய மூன்று ஆவணங்கள் கட்டாயம். ஆனால் குடும்பத்தினரால் இறப்பு சான்றுதழை சமர்ப்பிக்க முடியவில்லை.

அதனால் உள்ளூர் சர்பஞ்ச் அல்லது பிற அதிகாரிகளிடமிருந்து இறப்பு சான்றுதலை கொண்டுவர சொன்னபோது எங்கள் பாதுகாப்பு காவலர்களில் ஒருவர் அந்த வயதான பெண் மூச்சு விடுவதை கண்டார் என்று கூறினார்.

உடனே அங்கிருந்த தகன கூடத்தின் ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அந்த பெண்ணை அருகில் இருந்த பூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த மூதாட்டியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.

அவரது இதயம் மற்றும் சிறுநீரகங்கள் செயல்படுகின்றன. ஆனால் அவரது மூளை சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிவித்தனர்.

இறந்துவிட்டதாக நினைத்து தகன மேடை வரை கொண்டு செல்லப்பட்ட மூதாட்டி மீண்டும் உயிருடன் மீண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.