Home தமிழகம் “அரையாண்டு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை!”

“அரையாண்டு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை!”

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் கடந்த 10ஆம் தேதி தொடங்கின.

இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகள் இன்று முடிவுக்கு வருகின்றன.

தேர்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நாளை முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. பள்ளிக் கல்வி ஆண்டுக்கான நாட்காட்டியின் படி, அரையாண்டுத் தேர்வுக்கு மொத்தம் 12 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.

நாளை முதல் அடுத்த மாதம் ஜனவரி 4ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜனவரி 5ஆம் தேதி திங்கட்கிழமை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அரையாண்டு விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.