திருக்குறள் – 3
குறள்:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
பொருள் (விளக்கம்):
மலரின் மேல் அமர்ந்திருப்பவனாகக் கூறப்படும் இறைவனின் உயர்ந்த அடிகளைப் பற்றிக் கொண்டவர்கள், இந்த உலகில் நீண்ட காலம் சிறப்புடன் வாழ்வார்கள்.
அந்த கிராமத்தில் சுந்தரம் என்பவன் எல்லோருக்கும் தெரிந்த மனிதன். பெரிய பணக்காரனும் இல்லை, பெரும் பதவியிலும் இல்லை. ஆனால் யாருக்கும் தீங்கு நினைக்காத மனசு அவனுக்கு இருந்தது.
ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன், அவன் வீட்டின் முன் இருந்த சிறிய துளசி செடியை நீரூற்றி, அமைதியாக கண்களை மூடி ஒரு நிமிடம் நின்றுவிடுவான். “நல்லதை நினைத்து, நல்லதைச் செய்வதே என் வழி” என்பதே அவன் வாழ்க்கை நெறி.
ஒரு நாள் கிராமத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் தொடங்கினர். அதனால் சண்டை, பொய், அவநம்பிக்கை அதிகரித்தது. அந்த வழியைத் தேர்ந்தவர்கள் விரைவில் உயர்ந்ததாக நினைத்தார்கள்.
ஆனால் சுந்தரம் மட்டும் தன் நேர்மையை விடவில்லை. “இப்போ கஷ்டமா இருந்தாலும், மனசு நிம்மதியா இருக்கணும்” என்று சொல்லிக்கொண்டே, அவன் தன் வழியில் நடந்தான். சிலர் அவனைப் பார்த்து சிரித்தார்கள். சிலர் “இவன் பழைய காலத்து மனிதன்” என்றார்கள்.
ஆண்டுகள் கடந்தன. குறுக்கு வழியில் சென்றவர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இழந்து சிதறினார்கள். சிலர் சட்டச் சிக்கலில் சிக்கினார்கள்.
ஆனால் சுந்தரம்?
அவன் வாழ்வு அமைதியாக நீடித்தது. அவன் பிள்ளைகள் நல்ல கல்வி, நல்ல பழக்கம் பெற்றார்கள். கிராமத்தில் பிரச்சனை வந்தால், “சுந்தரத்தைக் கேளுங்க” என்று மக்கள் சொன்னார்கள்.
அப்போது தான் அனைவருக்கும் புரிந்தது —
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தவன்,
அதாவது உயர்ந்த பண்புகளையும் நேர்மையையும் பற்றிக் கொண்டவன்,
நிலமிசை நீடுவாழ்வான் என்பதன் உண்மையான அர்த்தம்.
வாழ்க்கையை நீளமாக்குவது ஆண்டுகள் அல்ல;
அதை அர்த்தமுள்ளதாக மாற்றுவது தான் மெச்சூரிட்டி.








