வேகமா வளர்ந்து வர நவீனத்திற்கு ஏத்த மாதிரி மக்களும் மாறிக்கொண்டுதான் இருக்காங்க. அதுல குறிப்பிட்டத்தக்க ஒரு விஷயம்தான் ஆன்லைன் ஷாப்பிங்.
முன்னாடி எல்லாம் கடைகளுக்கு சென்றுதான் நாம பொருட்களை வாங்கணும். ஆனா இப்ப எல்லாத்துக்குமே ஆன்லைன் ஷாப்பிங் வந்துடுச்சு. வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களிலிருந்து ஆடம்ப பொருட்கள் வரைக்கும் வீட்ல இருந்து கொண்டே ஆன்லைன்ல ஆர்டர் செய்றதுனால இப்ப எல்லாமே ஈஸியா வீட்டுக்கே வந்துருது.
ஆன்லைன்ல அதிகமா பொருட்கள் வாங்குவது உங்களுடைய பணத்தை செலவாக்குவதுடன் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது..
ஆன்லைன் ஷாப்பிங் ஒருவரோட உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா பல ஆய்வு முடிவுகள் கூறுகிறது. சிலர் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாகறாங்க. இதனால தினமும் ஆன்லைன்ல ஆர்டர் போடுவதையே வாடிக்கையா வச்சிருக்காங்க.
அவங்க ஒரு நாளைக்கு ஆர்டர் போடலைனா அவங்களுக்கு தூக்கமே வராது. அப்படிங்கிற ஒரு நிலைக்கு தள்ளப்படுறாங்க. இதுவும் ஒரு வகை அடிமை தான் மருத்துவத்துறையில் இதை ஆன்லைன் ஷாப்பிங் அடிமையாதல் அதாவது ஓஸ்ஏ அப்படின்னு வகைப்படுத்துறாங்க.இதற்காக தனியாக சிகிச்சையும் அளிக்கப்படுது.
அவர்களுக்கு கவலை, மனசோர்வு ஏற்படும். அதுபோல பொருளாதாரத்தை பொறுத்தவரைக்கும் நிதிசிக்கல் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறதாம். அதனால
மன உளைச்சலுக்கு ஆளாகுவதாகவும் இதனால் மன அழுத்தம், சலிப்பு போன்ற எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக ஏற்படும் என்றும் சொல்றாங்க.
ஏற்கனவே இப்பருக்க காலகட்டத்தில் பெரும்பாலானோர் அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்றாங்க. வீட்டிலும் அமர்ந்து இருப்பதால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.. இது உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது கணினி அல்லது மொபைல் போன் முன்பாக நீண்ட நேரம் இருக்கும்போது அதனால கழுத்து வலி, முதுகு வலி, தசை வழி போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். தூக்கத்திலும் பிரச்சனை வரலாம்.
ஆன்லைன் ஷாப்பிங்ல இருந்து விடுபட என்னென்ன விஷயங்களை செய்யலாம் .
பொருட்களை வாங்குறது தவறு இல்ல. அவசரத்திற்கு வெளியே செல்ல முடியாத நிலையில் ஆன்லைன்ல வாங்கலாம். ஆனா முடிஞ்ச வரைக்கும் நேரா சென்று பொருட்களை வாங்க முயற்சி செய்யணும். கடைக்கு அருகில் இருந்தா நடந்து சென்று வாங்கலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும்.
இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில் பல நோய்களில் இருந்து தப்பிக்க கண்டிப்பா உடல் இயக்கம் ரொம்ப அவசியமாக்குது. ஆன்லைன்ல ஷாப்பிங் பண்ணும் போது அளவுக்கு அதிகமா நமக்கு தேவையில்லாத பொருட்களை வாங்க கூட வாய்ப்பு இருக்கு.
இப்போ நீங்க நேரா சென்று பொருட்களை வாங்கும் போது நமக்கு எது தேவையோ அதை மட்டும் வாங்கிக்கிறோம். இதனால செலவும் குறையும். நமக்கு தேவையான பொருட்களை லிஸ்ட் போட்டு இந்த பொருட்கள் தேவையா அப்படின்னு ஒரு வாட்டி செக் பண்ணிட்டு அந்த பொருட்களை மட்டும் நாம வாங்கலாம்.
சமூக ஊடகங்கள்லையும் ஆன்லைன் ஷாப்பிற்கு ரொம்பவே தொடர்பு இருக்கு. ஏன்னா பொருட்களை வாங்க தூண்டுவதே அந்த ஊடகங்கள்தான். சமூக ஊடகங்கள் ஒரு பொருட்களை வாங்க எப்பவுமே நம்மளை தூண்டிக்கிட்டே இருக்கும்.
ஒன்னு அதை விட்டு தள்ளி இருக்கணும் இல்லையா நம்ம மனசை கண்ட்ரோலா வச்சிருக்கணும். குறிப்பாக உணவை ஆன்லைன்ல ஆர்டர் செய்வதை தவிர்க்கவும். இதன் மூலமா செலவையும் குறைக்கலாம்.








