ஜம்மு காஷ்மீரில் கடந்த 1986 ஆம் ஆண்டுக்கு பிறகு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் உள்ள ரஞ்சித் சாகர் அணையிலிருந்து மதகுகள் வழியாக உவரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்மட்டங்கள் உயர்ந்து வருவதாலும் மாதோபூர் தடுப்பணையிலும் மதகுகள் திறக்கப்பட்டதாலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சக்கை மற்றும் பஞ்சாபின் பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.








