ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு குழுமத்தின் தலைவர் அணில் அம்பானியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சுமார் ₹1,120 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இந்நடவடிக்கையில் முடக்கப்பட்டுள்ளன. நில மோசடி தொடர்பாக இதுவரை அணில் அம்பானியின் மொத்தம் ₹10,117 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள குடியிருப்பு நிலங்கள், பிளாட்கள், வீடுகள் உள்ளிட்ட பல சொத்துக்களும் இந்த முடக்கலில் அடங்குகின்றன. ஹோம் பைனான்ஸ், ரிலையன்ஸ் கமெர்ஷியல் பைனான்ஸ், எஸ்-வங்கி மோசடி வழக்குகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அணில் அம்பானியின் மேலும் ₹1,120 கோடி மதிப்பிலான சொத்துக்கள் நில மோசடி வழக்கு பிரிவில் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள குடியிருப்பு வீடுகள், பிளாட்கள் உள்ளிட்ட சொத்துக்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
அணில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்த சொத்துக்கள், வங்கி மோசடி மற்றும் கடன் மோசடி வழக்குகளில் சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையால் தொடர் விசாரணையில் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்குகளைத் தொடர்ந்து, தற்போது ரிலையன்ஸ்–அணில் அம்பானி குழுமத்தின் மொத்தம் ₹10,117 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இன்று முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு மட்டும் ₹1,120 கோடி எனவும், இவை தற்காலிகமாக முடக்கப்பட்டவை எனவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
ஹோம் பைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் கமெர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட், எஸ்-வங்கி மோசடி வழக்குகளில் 18 சொத்துக்கள், நிரந்தர வைப்பு நிதி, வங்கி கையிருப்புகள் உள்ளிட்டவை தடையிலிடப்பட்ட பட்டியலில் உள்ளன.
சென்னையில் மட்டும் 231 நிலச் சொத்துக்கள், 7 பிளாட்கள், 1 குடியிருப்பு உள்ளிட்டவை ரிலையன்ஸ் குழுமம் தொடர்பாக முடக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் எஸ்-வங்கி மோசடி மிக முக்கியத்துவமாக பார்க்கப்படுகின்றது. எஸ்-வங்கியில் முதலீடு செய்யப்பட்ட நிதி, விதிமீறி மீண்டும் அணில் அம்பானி குடும்ப நிறுவனங்களுக்கே மாற்றப்பட்டதாக அமலாக்கத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில்தான் பணம் முடக்கம் முதல் சொத்து முடக்கம் வரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை விளக்கியுள்ளது.








