இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வங்கிகளில்லிருந்து பணத்தை எளிதாக பெற ஏடி.எம் இயந்திரங்களை அனைவரும் பயன்படுத்துகின்றோம். ஆனால் அதே சமயம் சிலர் அதை குறிவைத்து புதிய மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில் அதிகம் பேசப்படும் ஒரு மோசடி முறையே கேஸ் டிராப் ஸ்கேன். இந்த மோசடியில் ஒருவர் ஏடிஎம் -ல் பணம் எடுக்கும்போது இயந்திரம் செயல்பட்டாலும் பணம் வெளியே வருவதில்லை. வாடிக்கையாளர் நீண்ட நேரம் காத்திருந்து சோர்ந்து பணம் வரவில்லை என நினைத்து வெளியேறுகின்றார்.
ஆனால் உண்மையில் பணம் வெளியே வந்திருக்கிறது. கேஷ் அவுட் ஸ்லாட்டில் கருப்பு நிற டேப் அல்லது பிளாஸ்டிக் போன்ற பொருட்களை ஒட்டி இருப்பதால் அந்த பணம் உள்ளே சிக்கி விடுகிறது. பின்னர் மோசடிக்காரர்கள் எளிதாக வந்து அந்த டேப்பை எடுத்து சிக்கிய பணத்தை திருடிச் செல்கின்றனர்.
இப்படி ஒரு சூழலில் பாதிக்கப்படுபவர் தன் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டுவிட்டதை உணராமல் இயந்திரம் பழுதாக இருக்கலாம் என்று நினைத்து விலகிச் செல்கிறார்.
இதுபோன்ற மோசடிகளை தவிர்க்கு சில முன்னெச்சரிக்கைகள் அவசியம். பணம் வரவில்லை என்றால் உடனே இயந்திரத்தை விட்டு செல்லாமல் ஸ்லாட் பகுதியை கவனமாக சோதிக்க வேண்டும்.
ஏடிஎம்-ல் சந்தேகத்திற்கடமான பொருள் ஏதேனும் ஓட்டப்பட்டிருந்தால் அதை எடுக்காமல் வங்கிக்கு உடனடியாக தகவல் தர வேண்டும். எப்போதும் பரிவர்த்தனை ரசீதை சரிபார்க்க வேண்டும். சந்தேகத்திற்கடான சூழலில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வங்கி ஹெல்ப்லைனுக்கு புகார் செய்யலாம். பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையிலும் சிறு கவன குறைவால் பெரிய இழப்புகள் ஏற்படக்கூடும்.








